search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது " தீ விபத்து"

    • தீக்காயம் அடைந்தவர்கள் படுப்பதற்கு வசதியான மருத்துவ குணம் கொண்ட மெத்தைகளை வழங்கினார்.
    • 8 பேருக்கு தீ காயம் ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    நாகர்கோவில் :

    தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ மெத்தையை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.

    பார்வதிபுரத்தில் டீ கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் கடைக்கு டீ குடிக்க வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர் என 8 பேருக்கு தீ காயம் ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்த குமரி எம்.பி., விஜய் வசந்த் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் தீ காயம் பட்டவர்களுக்கான தேவையான உதவிகளை செய்த அவர், தீக்காயம் அடைந்தவர்கள் படுப்பதற்கு வசதியான மருத்துவ குணம் கொண்ட மெத்தைகளை வழங்கினார்.

    இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் ரெனி மோள் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

    தெற்கு டெல்லியில் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    தெற்கு டெல்லியின் மால்வியாநகர் பகுதியில் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி நேற்று மாலை திடீர் என்று தீப்பிடித்தது.

    தீ மளமள வென்று எரிந்தது. அருகில் இருந்த குடோனுக்குள் பரவியது. அதில் இருந்த ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்குகள் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தன. இதனால் தீ அணைக்க முடியாத அளவுக்கு விடிய விடிய எரிந்து கொண்டே இருந்தது.

    தீயணைப்பு படை வீரர்கள் 25 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். என்றாலும் தொடர்ந்து தீ புகை மூட்டத்துடன் எரிந்து கொண்டே இருந்தது. டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் புகை பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இன்று மேலும் 10 தீயணைப்பு வாகனங்களும் விமானப்படை ஹெலிகாப்டரும் தீயணைக்கும் பணிக்கு உதவிக்கு வரவழைக்கப்பட்டது. 16 மணி நேரத்துக்கும் மேல் பற்றி எரிந்த தீ இன்று காலை கட்டுப்படுத்தப்பட்டது என்றாலும் தொடர்ந்து புகை மூட்டம் வந்து கொண்டே இருந்தது.

    அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தீயில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் கடும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #tamilnews

    ×